தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: காலிறுதியில் அகங்ஷா

ஸ்குவாஷ்: காலிறுதியில் அகங்ஷா

ஸ்குவாஷ்: காலிறுதியில் அகங்ஷா


ADDED : ஏப் 18, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை அகங்ஷா முன்னேறினார்.

எகிப்தில் வரும் மே 9-17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, மலேசியாவின் தனுசா உத்ரியன் மோதினர். முதல் செட்டை 11-7 எனக் கைப்பற்றிய அகங்ஷா, இரண்டாவது செட்டை 8-11 என இழந்தார். மூன்றாவது செட்டை 11-3 என வென்ற இவர், நான்காவது செட்டை 7-11 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் எழுச்சி கண்ட அகங்ஷா 11-5 என தன்வசப்படுத்தினார்.

முடிவில் உலகின் 'நம்பர்-71' அகங்ஷா 3-2 (11-7, 8-11, 11-3, 7-11, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us