/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'
/
ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'
ADDED : டிச 22, 2024 09:46 PM

மும்பை: 'வெஸ்டர்ன் இந்தியா ஸ்லாம்' ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
மும்பையில், 'வெஸ்டர்ன் இந்தியா ஸ்லாம்' சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 16, அகன்ஷா சாலுங்கே மோதினர். மொத்தம் 25 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அனாஹத் சிங் 3-0 (11-8, 11-8, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். தவிர இது, இத்தொடரில் இவரது 3வது பட்டம். கடந்த ஆண்டு 19 வயது, பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அகன்ஷாவை முதன்முறையாக வீழ்த்திய அனாஹத், இந்த ஆண்டு பி.எஸ்.ஏ., சாலஞ்சர் தொடரில் 9வது முறையாக கோப்பை வென்றார்.
ஆண்களுக்கான பைனலில் மலேசியாவின் அமீஷென்ராஜ் சந்திரன் 3-1 (15-13, 6-11, 11-5, 11-3) என செக்குடியரசின் விக்டர் பைர்டசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.