/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
ADDED : டிச 20, 2025 10:05 PM

மும்பை: 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் அரையிறுதிக்கு ஜோஷ்னா, வீர் சோட்ரானி முன்னேறினர்.
மும்பையில், 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா, ரெய்வா நிமல்கல் மோதினர். இதில் ஜோஷ்னா 3-0 (11-4, 11-3, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் சன்யா வாட்ஸ் 3-1 (11-6, 10-12, 11-3, 11-5) என, பூஜா ஆர்த்தியை தோற்கடித்தார்.
ஆண்களுக்கான காலிறுதியில் வீர் சோட்ரானி, மகேஷ் மங்கான்கர் மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-0 (11-9, 11-9, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் சூரஜ் சந்த் 3-0 (11-3, 11-5, 11-1) என புரவ் ராம்பியாவை வென்றார்.

