/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் சவுரவ் கோசல்
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் சவுரவ் கோசல்
ADDED : பிப் 16, 2024 09:56 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் காலிறுதிக்கு இந்தியாவின் சவுரவ் கோசல் முன்னேறினார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோசல், அமெரிக்காவின் ஸ்பென்சர் லவ்ஜாய் மோதினர். அபாரமாக ஆடிய சவுரவ் கோசல் 3-1 (4-11, 11-8, 11-4, 13-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் சவுரவ் கோசல், பிரான்சின் விக்டர் குரூயின் மோதுகின்றனர்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் யூசப் சோலிமான் மோதினர். இதில் ஏமாற்றிய தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் 0-3 (6-11, 8-11, 2-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.