/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் ஊர்வசி
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் ஊர்வசி
ADDED : மார் 08, 2024 07:04 PM

பிரிஸ்டல்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு ஊர்வசி முன்னேறினார்.
இங்கிலாந்தில் பிரிஸ்டல் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஊர்வசி, 3-1 என இங்கிலாந்தின் ஜாஸ்மினை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஊர்வசி, இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை ஆஸ்திரேலியாவின் சோபியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 7-11 என இழந்த ஊர்வசி, அடுத்த செட்டை 11-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றினார் (9-11). பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த இரு செட்டுகளை 11-5, 11-7 என வசப்படுத்தினார்.
முடிவில் ஊர்வசி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் 'நம்பர்-5' வீராங்கனை, ஆஸ்திரேலியாவின் எரின் கிளாசனை சந்திக்கவுள்ளார்.

