/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: வேலவன் 'சாம்பியன்'
/
ஸ்குவாஷ்: வேலவன் 'சாம்பியன்'
ADDED : ஏப் 29, 2024 10:17 PM

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரான்சின் மெல்வில் சியானிமானிகோ மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-0 (11-6, 11-9, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, சர்வதேச அரங்கில் இவரது 8வது சாம்பியன் பட்டம் ஆனது.
இந்த வெற்றியின்மூலம் உலக ஸ்குவாஷ் தரவரிசையில் வேலவன், 58வது இடத்தில் இருந்து 57வது இடத்துக்கு முன்னேறினார். பைனல் வரை சென்ற மெல்வில் 23 இடங்கள் முன்னேறி 135வது இடத்தை கைப்பற்றினார்.

