உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 26, 2026 09:49 PM

அ நிறம் | அளவு
புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி முன்னேறினர்.
ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜெர்மனியின் ரபேல் காண்ட்ரா மோதினர். இதில் வேலவன் 3-1 (11-9, 6-11, 11-7, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூன் சோரஸ் மோதினர். இதில் சோட்ரானி 3-1 (13-11, 12-14, 11-9, 12-10) என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
