இந்தியாவுக்கு எட்டு பதக்கம் * ஆசிய ஜூனியர் ஸ்குவாஷில் அபாரம்
இந்தியாவுக்கு எட்டு பதக்கம் * ஆசிய ஜூனியர் ஸ்குவாஷில் அபாரம்
ADDED : மே 23, 2026 11:00 PM

பன்லிஹுவா: சீனாவில் ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ், 33வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. 13 வயது ஆண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அமர்யா பஜாஜ், 3-1 என (11-9, 11-8, 6-11, 11-8) மலேசியாவின் சபியுலை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அரோரா, 2-3 என வியட்நாமின் லியுங் சனிடம் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
13 வயது பெண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷனாயா, திவ்யான்ஷி என இருவரும் தோற்க, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
17 வயது பெண்கள் அரையிறுதியில் இந்தியாவின் அனிகா துபே, பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்கள் 19 வயது பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், மலேசியாவின் மோகனசுந்தரத்தை 3-1 என (11-6, 11-4, 3-11, 11-6) வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
இதுவரை பல்வேறு பிரிவுகளில் இந்தியாவுக்கு 4 வெண்கலம் கிடைத்துள்ளன. தவிர, 4 பதக்கம் (பைனல்) உறுதி செய்யப்பட்டன.
