ADDED : மே 25, 2026 11:25 PM

பன்லிஹுவா: சீனாவில் ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ், 33வது சீசன் நடந்தது. ஆண்கள் 19 வயது பிரிவு பைனலில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், தென் கொரியாவின் ஜாங்யியாக் லீயை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-2 என கைப்பற்றிய ஆர்யவீர், அடுத்த செட்டையும் 11-7 என வசப்படுத்தினார்.
தொடர்ந்து மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். 59 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஆர்யவீர் 3-0 என (11-2, 11-7, 11-9) என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
13 வயது ஆண்கள் பைனலில் இந்தியாவின் அமர்யா பஜாஜ், 2-3 என (11-5, 11-8, 9-11, 10-12, 6-11) வியட்நாமிடம் லியுங் நிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
17 வயது பெண்கள் பைனலில் இந்தியாவின் அனிகா துபே, 1-3 என (11-9, 4-11, 10-12, 4-11) மலேசியாவின் ஹர்லீய்ன் டானிடம் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன.
