ADDED : மே 28, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இந்தியா சார்பில் இளம் வீராங்கனை அனாஹத் சிங் பங்கேற்கிறார்.
தகுதிச்சுற்று முதல் போட்டியில் அனாஹத் சிங், 3-0 என (12-10, 11-3, 11-9) ரஷ்யாவின் ஹேலே வார்டை வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அனாஹத் சிங், இங்கிலாந்தின் மில்லி டாம்லின்சனை எதிர்கொண்டார். இதன் முதல் இரு செட்டை 11-6, 11-6 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டையும் 11-4 என எளிதாக வென்றார்.
23 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அனாஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தகுதிச்சுற்று கடைசி போட்டியில் பிரான்சின் மரியேவை சந்திக்க உள்ளார்.