தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அபே சிங் ஏமாற்றம்

ஸ்குவாஷ்: அபே சிங் ஏமாற்றம்

ஸ்குவாஷ்: அபே சிங் ஏமாற்றம்


ADDED : மார் 06, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறைஸ்ட்சர்ச்: சர்வதேச ஸ்குவாஷ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அபே சிங் தோல்வியடைந்தார்.

நியூசிலாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அபே சிங், ஸ்பெயினின் இகர் பஜாரெஸ் மோதினர்.

முதல் செட்டை 9-11 என இழந்தார் அபே சிங். அடுத்த செட்டை 12-14 என போராடி கோட்டை விட்டார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 10-12 என நழுவவிட்டார். முடிவில் அபே சிங் 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜப்பானின் டி சுகேயிடம் 1-3 என்ற (2-11, 11-7, 7-11, 1-11) கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us