/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'நாக் அவுட்' சுற்றில் இந்தியா * உலக ஸ்குவாஷ் தொடரில்...
/
'நாக் அவுட்' சுற்றில் இந்தியா * உலக ஸ்குவாஷ் தொடரில்...
'நாக் அவுட்' சுற்றில் இந்தியா * உலக ஸ்குவாஷ் தொடரில்...
'நாக் அவுட்' சுற்றில் இந்தியா * உலக ஸ்குவாஷ் தொடரில்...
ADDED : டிச 10, 2024 11:09 PM

ஹாங்காங்: உலக ஸ்குவாஷ் தொடர் 'நாக் அவுட்' சுற்றுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
ஹாங்காங்கில் உலக ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'சி' பிரிவில் இடம் பெற்றது. முதல் போட்டியில் கொலம்பியாவை வென்ற இந்தியா, அடுத்து பெல்ஜியத்தில் வீழ்ந்தது. நேற்று கடைசி போட்டியில் இத்தாலியை எதிர்கொண்டது.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 3-0 (11-3, 11-9, 11-3) என இத்தாலியின் கிறிஸ்டினாவை வென்றார். அடுத்து ஆகான்ஷா 3-0 என பிளவியாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் நிருபமா 3-0 என பியாட்ரிசை வீழ்த்தினார். இதையடுத்து இந்தியா 3-0 என வென்றது. பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து 'நாக் அவுட்' ('ரவுண்டு-16') சுற்றுக்கு முன்னேறியது. இதில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.
ஆண்கள் ஏமாற்றம்
இந்திய ஆண்கள் அணி முதல் போட்டியில் அயர்லாந்தை வென்றது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் 1-2 என கொலம்பியாவிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் பட்டியில் இரண்டாவது இடம் பிடித்து, 'நாக் அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது. இதில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.

