தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: பைனலில் தான்வி

ஸ்குவாஷ்: பைனலில் தான்வி

ஸ்குவாஷ்: பைனலில் தான்வி


ADDED : ஆக 07, 2025 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் பைனலுக்கு முன்னேறினார் தான்வி கன்னா.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் 'நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 114வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர்-4' வீராங்கனை, மலேசிய வீராங்கனை கோ ஜி ஜுவானை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை தான்வி 11-8 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டை 11-8 என வசப்படுத்திய இவர், மூன்றாவது செட்டை 11-4 என எளிதாக வென்றார். முடிவில் தான்வி, 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை இன்று எதிர்கொள்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us