/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: இந்தியா ஆண்கள் ஐந்தாவது இடம்
/
ஸ்குவாஷ்: இந்தியா ஆண்கள் ஐந்தாவது இடம்
ADDED : டிச 14, 2024 06:55 PM

ஹாங்காங்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆண்கள் அணி முதன் முறையாக ஐந்தாவது இடம் பிடித்தது.
ஹாங்காங்கில் உலக ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் தோற்ற இந்திய ஆண்கள் அணி, 5 முதல் 8வது வரையிலான இடத்தைப் பிடிக்க விளையாடியது. முதலில் ஜெர்மனியை வீழ்த்தியது. நேற்று ஹாங்காங்கை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் அபே சிங், கவான் லாவு மோதினர்.
இதில் அபே சிங் 12-10, 11-7, 11-4 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் வேலவன் செந்தில் குமார், 12-10, 8-11, 5-11, 11-1, 11-8 என்ற கணக்கில் ஹென்றி லியுங்கை போராடி வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 2-0 என வெற்றி பெற்று, இத்தொடரில் முதன் முறையாக 5வது இடம் பிடித்தது.
பெண்கள் 'ஏழு'
காலிறுதியில் தோற்ற இந்திய பெண்கள் அணி 5 முதல் 8 வரையிலான இடத்தைப் பெற களமிறங்கியது. இதில் இங்கிலாந்திடம் 0-3 என தோற்றது இந்தியா. அடுத்து 7-8வது இடத்துக்கான போட்டியில் 2-1 என பிரான்சை வீழ்த்தி, 7வது இடம் பெற்றது.