ADDED : மே 09, 2026 10:33 PM

கிஜா: எகிப்தில், உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கு இருந்த ஒரே வீராங்கனை அனாஹத் சிங், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீர் சோட்ரானி, ரமித் டான்டன், அபே சிங், வேலவன் செந்தில்குமார் பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் வீர் சோட்ரானி, உலகத் தரவரிசையில் 25 வது இடத்திலுள்ள சக வீரர் அபே சிங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை வீர் சோட்ரானி 14-12 என வென்றார். அடுத்த இரு செட்டை அபே சிங், 11-8, 11-5 என கைப்பற்றினார். பின் போராடிய வீர் சோட்ரானி, கடைசி இரு செட்டுகளை 11-7, 11-2 என வசப்படுத்தினார்.
முடிவில் வீர் சோட்ரானி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் தொடரின் 'நம்பர்-1' வீரர், எகிப்தின் மொஸ்தபா அசலை எதிர்கொள்கிறார்.
மற்றொரு போட்டியில் வேலவன் செந்தில் குமார், 0-3 என (8-11, 8-11, 3-11) பிரான்சின் விக்டரிடம் வீழ்ந்தார். ரமித் டான்டன் 1-3 என எகிப்தின் டார்கேயிடம் தோல்வியடைந்தார்.
