/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: பைனலில் இந்தியா * எகிப்து அணியை வீழ்த்தியது
/
ஸ்குவாஷ்: பைனலில் இந்தியா * எகிப்து அணியை வீழ்த்தியது
ஸ்குவாஷ்: பைனலில் இந்தியா * எகிப்து அணியை வீழ்த்தியது
ஸ்குவாஷ்: பைனலில் இந்தியா * எகிப்து அணியை வீழ்த்தியது
ADDED : டிச 13, 2025 11:09 PM

சென்னை: உலக கோப்பை ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியா முதன் முறையாக முன்னேறியது. அரையிறுதியில் எகிப்தை 3-0 என வீழ்த்தியது.
உலக கோப்பை ஷ்குவாஷ் தொடரின் 5வது சீசன் சென்னையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது. இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.
நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான எகிப்தை எதிர்கொண்டது. முதல் போட்டியில் வேலவன் செந்தில் குமார் 3-0 (7-1, 7-3, 7-6) என எகிப்தின் இப்ராஹிமை வென்றார்.
இரண்டாவது போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங், 3-2 (6-7, 7-5, 7-3, 3-7, 7-3) என்ற கணக்கில் நுார் ஹெய்கெலை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் அபே சிங் 3-1 என (7-5, 6-7, 7-5, 7-6) ஆதம் ஹாவலை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை ஸ்குவாஷ் பைனலுக்கு, முதன் முறையாக முன்னேறியது.
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் ஹாங்காங் சீனா, ஜப்பான் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற, ஸ்கோர் 2-2 என ஆனது. எனினும் புள்ளி அடிப்படையில் முந்திய ஹாங்காங் (87-74) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்று நடக்கும் பைனலில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

