தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஷ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

ஷ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

ஷ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா


ADDED : ஜூலை 29, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெய்ரோ: எகிப்தில் உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'பி' பிரிவில் இடம் பெற்றது. முதல் போட்டியில் 3-0 என அயர்லாந்தை வென்ற இந்தியா, அடுத்து ஹாங்காங்கிடம் 1-2 என தோற்றது.

நேற்று மூன்றாவது, கடைசி போட்டியில் பிரேசிலை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 11-4, 11-3, 11-3 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். அடுத்து உன்னதி 11-3, 11-2, 11-3 என எளிதாக வென்றார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனிகா, 11-1, 11-1, 11-5 என அசத்தினார். முடிவில் இந்தியா 3-0 என வென்று, பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று, வலிமையான எகிப்து அணியை சந்திக்க உள்ளது.

'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி, முதல் இரு போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0) சாய்த்தது. நேற்று மூன்றாவது போட்டியில் 2-1 என ஜப்பானை வீழ்த்தி, பட்டியலில் முதலிடம் பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us