தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா 'நம்பர்-1' * மணிகா பத்ராவை முந்தினார்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா 'நம்பர்-1' * மணிகா பத்ராவை முந்தினார்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா 'நம்பர்-1' * மணிகா பத்ராவை முந்தினார்


ADDED : ஏப் 23, 2024 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் 'நம்பர்-1' டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஆனார் ஸ்ரீஜா அகுலா.

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் 25 வயதான, இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 2 இடம் முன்னேறி, 38 வது இடம் பிடித்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்களில் இரு முறை கோப்பை வென்றார். சமீபத்தில் கோவாவில் நடந்த தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னேற்றம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் மற்றொரு வீராங்கனை மணிகா பத்ரா, 39வது இடத்தில் பின்தங்கினார். இதையடுத்து முதன் முறையாக இந்தியாவின் புதிய 'நம்பர்-1' வீராங்கனை ஆனார் ஸ்ரீஜா. யாஷஸ்வினி 99 வது, அர்ச்சனா 100 வது இடத்தில் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 41 வயதான 'சீனியர்' வீரர் அஜந்தா சரத் கமல், இரண்டு இடம் பின்தங்கி 37 வதாக உள்ளார். சத்யன் 60வது, மானவ் தக்கார், 61வது இடம் பிடித்துள்ளனர். நடப்பு தேசிய சாம்பியன் ஹர்மீத் தேசாய், 64 வதாக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us