/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சுருசி போகத் 4வது தங்கம்: தேசிய துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
/
சுருசி போகத் 4வது தங்கம்: தேசிய துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
சுருசி போகத் 4வது தங்கம்: தேசிய துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
சுருசி போகத் 4வது தங்கம்: தேசிய துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
ADDED : டிச 21, 2024 10:23 PM

புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதலில் ஹரியானாவின் சுருசி போகத் 4வது தங்கத்தை தட்டிச் சென்றார்.
டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 67வது சீசன் நடக்கிறது. இதில் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான பைனலில் ஹரியானா, உத்தரகாண்ட் அணிகள் மோதின. சுருசி போகத், சாம்ராட் ராணா அடங்கிய ஹரியானா அணி 16-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. உத்தரகாண்டின் அபினவ் தேஷ்வால், யாஷ்வி ஜோஷி ஜோடி வெள்ளி வென்றது.
இது, இத்தொடரில் சுருசி போகத் கைப்பற்றிய 4வது தங்கம். ஏற்கனவே இவர், பெண்கள், ஜூனியர், யூத் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் 3 தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், கடந்த சீசனில் ஒரு தங்கம் (ஜூனியர்), ஒரு வெள்ளி (பெண்கள்), ஒரு வெண்கலம் (யூத்) என தனிநபர் பிரிவில் 3 பதக்கம் வென்றிருந்தார். ஆறு ஆண்டுகளுக்கு பின் தேசிய துப்பாக்கி சுடுதலின் தனிநபர் பிரிவில் 3 தங்கத்தையும் தட்டிச் சென்ற வீராங்கனையானார் சுருசி போகத். இதற்கு முன் 2018ல் திருவனந்தபுரத்தில் நடந்த தொடரில் ஈஷா சிங் இப்படி சாதித்திருந்தார்.