/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சென்னை ஏமாற்றம்
/
டேபிள் டென்னிஸ்: சென்னை ஏமாற்றம்
ADDED : ஜூன் 09, 2025 10:51 PM

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி, கோவா அணியிடம் தோல்வியடைந்தது.
ஆமதாபாத்தில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவா, சென்னை அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய், சென்னையின் கிரில் ஜெராசிமென்கோ மோதினர். இதில் ஹர்மீத் 3-0 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 3-0 என பைஸ்யாவை (சென்னை) வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் போட்டியில் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி (கோவா) 2-1 என பைஸ்யா, கிரில் ஜெராசிமென்கோ ஜோடியை (சென்னை) வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் விக்டர் இஷி (கோவா) 2-1 என பயாஸ் ஜெயினை (சென்னை) தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கிரித்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என பேன் சிகியை (சென்னை) வீழ்த்தினார்.
முடிவில் கோவா அணி 12-3 என வெற்றி பெற்றது.