தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: கோவா கலக்கல்

டேபிள் டென்னிஸ்: கோவா கலக்கல்

டேபிள் டென்னிஸ்: கோவா கலக்கல்


ADDED : ஜூன் 06, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் கோவா அணி 10-5 என, புனே அணியை வீழ்த்தியது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவா, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், புனேயின் அல்வரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் ஹர்மீத் 2-1 என வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என ஜியோன் லீயை (புனே) வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி 3-0 என புனேயின் ஜியோ லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை தோற்கடித்தது.

ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் அனிர்பன் கோஷ் (புனே) 2-1 என தியாகோ அப்போலோனியாவை (கோவா) வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) வென்றார்.

முடிவில் கோவா அணி 10-5 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்ற கோவா அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us