/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா அபாரம் * ஸ்பெயினை வீழ்த்தியது
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா அபாரம் * ஸ்பெயினை வீழ்த்தியது
டேபிள் டென்னிஸ்: இந்தியா அபாரம் * ஸ்பெயினை வீழ்த்தியது
டேபிள் டென்னிஸ்: இந்தியா அபாரம் * ஸ்பெயினை வீழ்த்தியது
ADDED : பிப் 20, 2024 11:05 PM

புசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-32' சுற்றுக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்பெயினை சாய்த்தது.
தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறினால், பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறலாம். இந்திய பெண்கள் அணி 'குரூப்-1' ல் இடம் பெற்றது.
நேற்று தனது கடைசி லீக் போட்டியில் ஸ்பெயினை சந்தித்தது. முதல் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீஜா, 1-3 (9-11, 11-9, 11-13, 4-11) என்ற கணக்கில் மரியாவிடம் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சோபியா மோதினர். இதில் மணிகா பத்ரா, 2-3 (11-13, 11-6, 11-8, 9-11, 7-11) என தோற்க, இந்தியா 0-2 என பின்தங்கியது.
மூன்றாவது போட்டியில் இந்தியாவின் ஆயிஹா முகர்ஜீ, 3-2 (11-8, 11-13, 11-8, 9-11, 11-4) என்ற கணக்கில் எல்விராவை வென்றார். மாற்று ஒற்றையர் முதல் போட்டியில் மணிகா பத்ரா, 3-0 என (11-9, 11-2, 11-4) மரியாவை சாய்த்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி, ஐந்தாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா, 4-0 என (11-6, 13-11, 11-6, 11-3) சோபியாவை வென்றார்.
முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. 4 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 7 புள்ளி பெற்று, 'ரவுண்டு-32' சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தை சந்தித்தது. இதில் இந்திய வீரர்கள் சத்யன், ஹர்மீத் தேசாய், மனுஷ் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்றனர். முடிவில் இந்தியா 3-0 என வென்றது.

