/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்
ADDED : பிப் 21, 2024 06:37 PM

புசன்: உலக டேபிள் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய அணிகள் தோல்வியடைந்தன.
தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
பெண்களுக்கான 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றனர். அடுத்து நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய அணி, சீனதைபே அணியை சந்தித்தது. இந்திய அணி 1-3 என தோல்வியடைந்து வெளியேறியது. மணிகா பத்ரா மட்டும் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் தலா ஒரு வெற்றி பெற்றனர். அடுத்து நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. ஹர்மீத் தேசாய், அஜந்தா சரத் கமல், சத்யன் தோல்வி அடைந்தனர்.

