ADDED : மார் 30, 2024 09:15 PM

ஓடோசெக்: டபிள்யு.டி.டி., தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் மானவ், மனுஷ் ஜோடி முன்னேறியது.
சுலோவேனியாவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் 'ரவுண்டு-16' சுற்றில் இந்தியாவில் மானவ் விகாஷ், மனுஷ் ஜோடி, பிரேசிலின் கார்லஸ் இஷிதா, குயில்ஹெர்மே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 11-4 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 11-5 என வசப்படுத்தியது.
முடிவில் இந்திய ஜோடி 3-0 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதில் பின்லாந்தின் அலெக்ஸ் நவுமி, பெனெடெக் ஜோடியை சந்திக்கவுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மானவ் விகாஷ், ஆஸ்திரியாவின் மாசியெஜ்சை எதிர்கொண்டார். இதில் மானவ் 3-0 என்ற கணக்கில் (14-12, 11-7, 11-5) வெற்றி பெற்று, 'ரவுண்டு-19' சுற்றுக்குள் நுழைந்தார்.
