UPDATED : ஏப் 01, 2024 12:03 AM
ADDED : ஏப் 01, 2024 12:00 AM

ஓடோசெக்: சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் மானவ், மனுஷ் ஜோடி முன்னேறியது.
சுலோவேனியாவில் டபிள்யு.டி.டி., சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மானவ் விகாஸ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, பின்லாந்தின் அலெக்ஸ் நவுமி, பெனெடெக் ஓலா ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய மானவ், மனுஷ் ஜோடி 3-0 (11-4, 11-7, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
பைனலில் இந்திய ஜோடி, சுலோவாகியாவின் லுபோமிர் பிஸ்தேஜ், ஜாகுப் ஜெலின்கா ஜோடியை சந்திக்கிறது.
காலிறுதியில் மானவ்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் மானவ் விகாஸ் தக்கார், பிரான்சின் கேன் அக்குசூ மோதினர். முதல் செட்டை 3-11 என இழந்த மானவ் விகாஸ், 2வது செட்டை 11-4 எனக் கைப்பற்றினார். பின் 3வது செட்டை 7-11 எனக் கோட்டைவிட்ட மானவ், அடுத்த இரு செட்களை 11-8, 11-8 என வென்றார். முடிவில் மானவ் விகாஸ் 3-2 (3-11, 11-4, 7-11, 11-8, 11-8) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
