/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி
/
டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி
ADDED : பிப் 17, 2024 08:42 PM

புசன்: உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என சிலியை வீழ்த்தியது.
தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறும் அணிகள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய ஆண்கள் அணி 'குரூப்-3' பிரிவில் தென் கொரியா, நியூசிலாந்து, போலந்து, சிலி அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அஜந்தா சரத் கமல், ஹர்மீத் தேசாய், சத்யன் வெற்றி பெற்றனர். இன்று இந்திய அணி, போலந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் தென் கொரியா (பிப். 19), நியூசிலாந்தை (பிப். 20) சந்திக்கிறது.
இந்திய பெண்கள் அணி 'குரூப்-1' பிரிவில் சீனா, ஸ்பெயின், ஹங்கேரி, உஸ்பெகிஸ்தானுடன் இடம் பிடித்துள்ளது. சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, இன்று ஹங்கேரியை சந்திக்கிறது. அதன்பின் உஸ்பெகிஸ்தான் (பிப். 19), ஸ்பெயினுடன் (பிப். 20) விளையாடுகிறது.