தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி


ADDED : பிப் 19, 2024 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புசன்: உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-0 என உஸ்பெகிஸ்தானை வென்றது.

தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

'குரூப்-1' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி முதல் போட்டியில் சீனாவிடம் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஹங்கேரியை வீழ்த்தியது.

மூன்றாவது போட்டியில் உஸ்பெகிஸ்தானை சந்தித்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, அர்ச்சனா, தியா பராக் வெற்றி பெற்றனர். இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

'குரூப்-3' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி, தனது முதல் போட்டியில் சிலியை வென்றது. இரண்டாவது போட்டியில் போலந்திடம் வீழ்ந்தது.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்தியா 0-3 என தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அஜந்தா சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய் தோல்வியை தழுவினர். இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us