தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தெற்காசியா டேபிள் டென்னிஸ்: இந்திய அணி சாம்பியன்

தெற்காசியா டேபிள் டென்னிஸ்: இந்திய அணி சாம்பியன்

தெற்காசியா டேபிள் டென்னிஸ்: இந்திய அணி சாம்பியன்


ADDED : மே 28, 2024 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்டி: தெற்காசிய டேபிள் டென்னிசில் இந்திய இளம் அணிகள் கோப்பை வென்றன.

இலங்கையின் கண்டியில் தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் 19 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதியில் இந்திய இளம் பெண்கள் அணி 3-0 என நேபாளத்தை வென்றது. பைனலில் இந்தியா, இலங்கை மோதின.

முதல் போட்டியில் சயாலி வாணி, 3-0 (11-6, 12-10, 11-8) என பிமாந்தீயை வென்றார். அடுத்து பிரிதா 3-2 (7-11, 11-3, 11-7, 6-11, 11-8) என கவிந்த்யாவை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் தனீஷா 3-0 என (11-8, 11-7, 11-7) திவ்யா ராணியை சாய்த்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வசப்படுத்தியது.

15 வயது பிரிவு பைனலில் இந்திய அணி 3-0 என இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.

ஆண்கள் பிரிவு (15 வயது) பைனலில் இந்தியா, இலங்கை மோதின. முதல் இரு போட்டியில் இந்தியாவின் நவிரு, சோஹம் வெற்றி பெற்றனர். அடுத்து சாஹில் தோல்வியடைந்தார். 4வது போட்டியில் சார்தக் வெற்றி பெற, இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us