/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்
/
டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்
ADDED : மே 09, 2024 10:58 PM

ஜெட்டா: சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிசின் காலிறுதியில் தோல்வியடைந்தார் மணிகா பத்ரா.
சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை வாங் மன்யுவை (சீனா) வென்றார் இந்தியாவின் மணிகா பத்ரா (நம்பர்-39).
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இவர், 3-0 என ( 11-6, 11-9, 11-7) உலகின் 'நம்பர்-14' வீராங்கனை, ஜெர்மனியின் நினா மிட்டெல்ஹாமை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த காலிறுதியில் மணிகா பத்ரா, ஜப்பானின் ஹினா ஹயாட்டாவை சந்தித்தார். இதன் முதல் செட்டை மணிகா பத்ரா 11-7 என வென்றார். அடுத்த இரு செட்டை 6-11, 4-11 என இழந்தார். தொடர்ந்து ஏமாற்றி இவர் கடைசி இரு செட்டுகளையும் (11-13, 2-11) நழுவவிட்டார். முடிவில் 1-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.