/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: மணிகா அணி அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: மணிகா அணி அபாரம்
ADDED : டிச 16, 2024 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓஸ்லோ: வால்ட்னர் கோப்பை டேபிள் டென்னிசில் மணிகா பத்ரா இடம் பெற்ற ஆசிய அணி சாம்பியன் ஆனது.
நார்வே டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் வால்ட்னர் கோப்பை முதல் சீசன் நடந்தது. இதில் உலக, ஆசிய அணிகள் மோதின. ஆசிய அணியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் மா லாங், சென் மெங், தென் கொரியாவின் ஷின் யு-பின், கஜகஸ்தானின் கிரில் ஜெராசிமென்கோ இடம் பெற்றனர். லீக் போட்டியில் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். இருப்பினும் ஆசிய அணி 14-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

