/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சத்யன் 'சாம்பியன்'
/
டேபிள் டென்னிஸ்: சத்யன் 'சாம்பியன்'
ADDED : மார் 22, 2024 10:32 PM

பெய்ரூட்: சர்வதேச டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் சத்யன் சாம்பியன் பட்டம் வென்றார்.
லெபனானில் டபிள்யு.டி.டி., சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், மானவ் விகாஸ் தாக்கர் மோதினர். முதல் செட்டை 6-11 என இழந்த சத்யன், பின் எழுச்சி கண்டு அடுத்த மூன்று செட்களை 11-7, 11-7, 11-4 எனக் கைப்பற்றினார். முடிவில் சத்யன் 3-1 (6-11, 11-7, 11-7, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இத்தொடரில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, 2021க்கு பின் சர்வதேச ரேங்கிங் தொடரின் ஒற்றையரில் சத்யன் கைப்பற்றிய முதல் பட்டமானது. 2021ல் செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் விகாஸ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடி 1-3 (11-5, 7-11, 11-13, 12-14) என கியூபாவின் ஆன்டி பெரெய்ரா, ஜார்ஜ் கேம்போஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி என 4 பதக்கம் கிடைத்தது.

