தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா தோல்வி

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா தோல்வி

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா தோல்வி


UPDATED : ஜன 10, 2025 09:16 PM

ADDED : ஜன 09, 2025 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2025 09:16 PM ADDED : ஜன 09, 2025 10:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோகா: உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் 3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார்.

கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சீனாவின் கியான் டியானி மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீஜா அகுலா 0-3 (9-11, 8-11, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, சீனாவின் ஜியாங் பெங், ஜு யிங்பின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் மானவ், மனுஷ் ஜோடி 2-3 (9-11, 11-7, 1-11, 11-8, 7-11) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெளியேறியது.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. அடுத்து இந்திய நட்சத்திரங்கள் ஜன. 12-17ல் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவுள்ள டபிள்யு.டி.டி., கன்டென்டர் தொடரில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us