தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இரண்டாவது சுற்றில் மணிகா

இரண்டாவது சுற்றில் மணிகா

இரண்டாவது சுற்றில் மணிகா


ADDED : ஏப் 09, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தய்யுவான்: சீனாவின் தய்யுவான் நகரில் டபிள்யு.டி.டி., சார்பில் டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா மட்டும் பங்கேற்கிறார்.

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, இத்தொடரின் 'நம்பர்-6' வீராங்கனை, ஜப்பானின் மியூ கிஹாராவை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-8 என கைப்பற்றிய மணிகா, அடுத்த செட்டை 10-12 என இழந்தார்.

மூன்றாவது செட்டில் போராடிய இவர், 14-12 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த நான்காவது செட்டை 9-11 என நழுவவிட்டார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ஐந்தாவது, கடைசி செட்டில் மணிகா 11-7 என அசத்தினார். முடிவில் மணிகா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் ஜப்பானின் மற்றொரு வீராங்கனை மியு ஹிரானோவை சந்திக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us