/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா கலக்கல்
/
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா கலக்கல்
ADDED : பிப் 19, 2025 11:12 PM

ஷென்ஜென்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் முதல் போட்டியில் ஸ்ரீஜா வெற்றி பெற்றார்.
சீனாவில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. இந்தியா சார்பில் அஜந்தா சரத்கமல், ஹர்மீத் தேசாய், ஸ்ரீஜா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையரில் பிரிவு 1ல் இடம் பெற்றுள்ளார்
இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா. நேற்று தனது முதல் போட்டியில் 3-0 என (11-7, 11-5, 11-4), கத்தாரின் அயா முகமதுவை வீழ்த்தினார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் யாஷஸ்வினி (பிரிவு 5), ஆயிஹா (பிரிவு 8) தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்தனர்.
ஆண்கள் ஒற்றையரில் 3வது பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் சரத்கமல், முதல் போட்டியில் 0-3 என (4-11, 4-11, 8-11) சீனாவின் லியாங் ஜின்குனிடம் தோல்வியடைந்தார். மற்ற போட்டிகளில் ஹர்மீத் தேசாய், மானவ் தக்கார் தோல்வியடைந்தனர்.