/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் அபாரம்
ADDED : பிப் 20, 2025 10:58 PM

ஷென்ஜென்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ், இரண்டாவது போட்டியில் சரத் கமல் வெற்றி பெற்றார்.
சீனாவில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. இந்தியா சார்பில் அஜந்தா சரத்கமல், ஹர்மீத் தேசாய், ஸ்ரீஜா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையரில் 3வது பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் சரத்கமல், தனது இரண்டாவது போட்டியில் ஏமனின் குப்ரானை சந்தித்தார். இதில் சரத்கமல் 3-0 என (11-6, 11-4, 11-7) என வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 3-2 (7-11, 12-10, 11-9, 8-11, 11-9) என கஜகஸ்தானின் கிரில்லை வீழ்த்தினார். இந்திய வீரர் மானவ் தக்கார், 3-2 என (6-11, 11-7, 11-8, 5-11, 11-4) சிங்கப்பூரின் ஐசக்கை வென்றார்.
பெண்கள் ஒற்றையரில் பிரிவு 2ல் இடம் பெற்ற ஸ்ரீஜா, தனது இரண்டாவது போட்டியில் 0-3 என (8-11, 10-12, 5-11) சீனாவின் சன் யுவிடம் தோல்வியடைந்தார்.

