sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

/

டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்


ADDED : பிப் 21, 2025 10:41 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷென்ஜென்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் இந்திய நட்சத்திரங்கள் தோல்வியடைந்தனர்.

சீனாவில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் அஜந்தா சரத்கமல், ஹர்மீத் தேசாய், ஸ்ரீஜா உள்ளிட்ட 6 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையரில் 3வது பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் சரத்கமல், நேற்று தனது மூன்றாவது போட்டியில் 0-3 என (6-11, 8-11, 6-11) என தோல்வியடைந்தார். இப்பிரிவில் 3ல் 1 வெற்றி மட்டும் பெற்ற சரத்கமல், 3வது இடம் பிடித்து 'நாக் அவுட்' ('ரவுண்டு-16') வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார், 0-3 என (10-12, 9-11, 11-13) சீனாவின் சென் இயிடம் தோல்வியடைந்து, வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையரில் பிரிவு 2ல் இடம் பெற்ற ஸ்ரீஜா, தனது மூன்றாவது போட்டியில் 0-3 என (5-11, 6-11, 7-11) சீன தைபேவின் சியனிடம் வீழ்ந்தார். 3 போட்டியில் 1ல் மட்டும் வென்ற ஸ்ரீஜா, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் ஆயிஹா, யாஷஸ்வி தோல்வியடைந்து திரும்பினர்.






      Dinamalar
      Follow us