/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: பவினா 'தங்கம்'
/
டேபிள் டென்னிஸ்: பவினா 'தங்கம்'
ADDED : ஆக 12, 2025 11:03 PM

ஸ்போகேன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், அரையிறுதியில் பிரிட்டனின் மேஹன் ஷாக்லெட்டனை 3-0 என வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் பவினா பென், இஸ்ரேலின் கரோலினை சந்தித்தார்.
முதல் செட்டை பவினா 11-4 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 11-4 என வசப்படுத்தினார். மூன்றாவது செட்டில் ஜொலித்த பவினா, 11-5 என வென்றார். முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் பவினா பென், சுபம் ஜோடி, பிரேசிலின் பிராகா, சுலோவாகியாவின் போரிஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 என (12-10, 11-8, 11-9) வெற்றி பெற்றது.