தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பவினா ஜோடி வெண்கலம் * பாரா டேபிள் டென்னிசில்...

பவினா ஜோடி வெண்கலம் * பாரா டேபிள் டென்னிசில்...

பவினா ஜோடி வெண்கலம் * பாரா டேபிள் டென்னிசில்...


ADDED : ஆக 14, 2025 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்போகேன்: வாஷிங்டனில் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். அடுத்து இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பவினா பென், சுபம் வாத்வா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில் இந்திய ஜோடி தென் கொரியாவின் கிம் ஜங் கில், லீ மில் கியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 12-10 என போராடி வென்ற இந்திய ஜோடி, அடுத்த மூன்று செட்டுகளையும் (2-11, 3-11, 3-11) எளிதாக கோட்டை விட்டது.

முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, வெண்கலப் பதக்கம் பெற்றது. இது இத்தொடரில் பவினா வென்ற இரண்டாவது பதக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us