தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சென்னையில் டேபிள் டென்னிஸ் * முதன் முறையாக சர்வதேச தொடர்...

சென்னையில் டேபிள் டென்னிஸ் * முதன் முறையாக சர்வதேச தொடர்...

சென்னையில் டேபிள் டென்னிஸ் * முதன் முறையாக சர்வதேச தொடர்...


ADDED : பிப் 18, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் முதன் முறையாக உலகத் தரம் வாய்ந்த, சர்வதேச டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்க உள்ளது.

சர்வதேச டேபிள் டென் னிஸ் சார்பில், 2021 முதல் 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2023, 2024 என கோவாவில் இரு முறை நடந்த இத்தொடர், முதன் முறையாக தற்போது சென்னையில் நடக்க உள்ளது. மார்ச் 25, 26ல் தகுதிச்சுற்று, மார்ச் 27-30ல் பிரதான சுற்று போட்டிகள், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 2.40 கோடியாக உள்ளது.

இதுகுறித்து இந்திய அணி 'சீனியர்' வீரர், சரத் கமல் (தமிழகம்) கூறுகையில்,'' உலக டேபிள் டென்னிஸ் அரங்கில் சென்னைக்கு இடம் கிடைத்திருப்பது சிறப்பு. உலக 'கன்டெண்டர்' தொடர், அடுத்த தலைமுறை டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைளுக்கு துாண்டுகோலாக அமையும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us