தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/காலிறுதியில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்

காலிறுதியில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்

காலிறுதியில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்


ADDED : அக் 02, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது.

சீனாவின் பீஜிங்கில், சர்வதேச ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் மனுஷ், மானவ் ஜோடி, சிலியின் நிகோலஸ் பர்காஸ், கஸ்டாவோ கோமஸ் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை இந்திய ஜோடி 16-14 என போராடி கைப்பற்றியது. அடுத்த செட்டை 8-11 என இழந்தது. பின் சுதாரித்த இந்திய ஜோடி. மூன்றாவது செட்டை 7-11 என வென்றது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, அடுத்த செட்டையும் 8-11 என வசப்படுத்தியது.

முடிவில் இந்திய ஜோடி 3-1 (16-14, 8-11, 11-7, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி 11-3, 7-11, 5-11, 5-11 என்ற கணக்கில் சீன தைபேவின் செங், லி யு ஜோடியிடம் தோற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us