sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

திவ்யான்ஷி ஜோடி சாம்பியன் * யூத் டேபிள் டென்னிசில்...

/

திவ்யான்ஷி ஜோடி சாம்பியன் * யூத் டேபிள் டென்னிசில்...

திவ்யான்ஷி ஜோடி சாம்பியன் * யூத் டேபிள் டென்னிசில்...

திவ்யான்ஷி ஜோடி சாம்பியன் * யூத் டேபிள் டென்னிசில்...


ADDED : அக் 20, 2025 08:27 PM

Google News

ADDED : அக் 20, 2025 08:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போட்கோரிகா: மான்டெனெக்ரோவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் யூத் கன்டெண்டர் தொடர் நடந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரல்லா ஜோடி, போர்டோரிகோவின் எட்மையர் லியான், போலந்தின் நடாலியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 11-4 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 11-5 என வசப்படுத்தியது.

மூன்றாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்திய ஜோடி 11-4 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

திவ்யான்ஷி 'வெள்ளி'

பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயதுக்கு உட்பட்ட) பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் இஷிதாவை சந்தித்தார். முதல் செட்டை 4-11 என இழந்த திவ்யான்ஷி, அடுத்த இரு செட்டை 11-4, 11-7 என வென்றார். நான்காவது செட்டை 15-17 என போராடி தோற்ற திவ்யான்ஷி, 5வது செட்டையும் 8-11 என நழுவவிட்டார்.

முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.






      Dinamalar
      Follow us