ADDED : ஆக 20, 2025 09:06 PM

மால்மோ: சுவீடனில் ஐரோப்பிய ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி, சிங்கப்பூரில் பங் கோயன், ஜெங் ஜியன் ஜோடியை சந்தித்தது.
முதல் இரு செட்டை இந்திய ஜோடி 11-8, 11-7 என வசப்படுத்தியது. அடுத்த செட்டை 8-11 என இழந்தது. நான்காவது செட்டை 12-10 என போராடி வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா, 1-3 என (9-11, 8-11, 11-6, 2-11) மக்காவின் ஜு யூலிங்கிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மானவ் தக்கார், 1-3 என (10-12, 7-11, 11-4, 12-14) தென் கொரியாவின் ஜயேயுனிடம் வீழ்ந்தார்.
பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி 1-3 என (5-11, 10-12, 12-10, 9-11) ஜெர்மனியின் யுவான் வான், வின்டர் ஜோடியிடம் தோல்வியடைந்தது.