தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/காலிறுதியில் மனுஷ் தோல்வி

காலிறுதியில் மனுஷ் தோல்வி

காலிறுதியில் மனுஷ் தோல்வி


ADDED : ஜன 16, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஸ்கட்: உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் காலிறுதியில் இந்தியாவின் மனுஷ் தோல்வியடைந்தார்.

ஓமனில், உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் மனுஷ் ஷா, இத்தொடரின் 'நம்பர்-6' வீரர் ஜப்பானின் சோராவை 3-2 என வீழ்த்தினார்.

காலிறுதியில் மனுஷ் ஷா, சீனாவின் சென் யுவான்யுவை சந்தித்தார். முதல் செட்டை 5-11 என இழந்த மனுஷ், அடுத்த செட்டை 8-11 என நழுவவிட்டார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் 8-11 என ஏமாற்றினார்.

முடிவில் மனுஷ் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, 1-3 என சீனாவின் குன் யுக்ஸ்வானிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 2-3 என ஜப்பானின் சகுராவிடம் போராடி வீழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us