ADDED : செப் 05, 2026 11:20 PM

அல்மாட்டி: டபிள்யு.டி.டி., கன்டெண்டர் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி முன்னேறியது.
கஜகஸ்தானில் டபிள்யு.டி.டி., சார்பில் 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி, சக இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் இரண்டு செட்டை 11-6, 12-10 என கைப்பற்றிய சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி, 3வது செட்டை 8-11 என இழந்தது. பின் நான்காவது செட்டை 11-6 என வசப்படுத்தியது. முடிவில் சிண்ட்ரெலா, சுதிர்த்தா ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று ஜப்பானின் மியு ஹிரானோ, மியூ கிஹாரா ஜோடியை சந்திக்க உள்ளது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிண்ட்ரெலா, 0-3 என (6-11, 5-11, 8-11) போர்டோரிகோவின் அட்ரியானாவிடம் தோல்வியடைந்தார்.
