மானவ்-மனுஷ் ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்
மானவ்-மனுஷ் ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்
ADDED : மே 25, 2026 11:30 PM

லாகோஸ்: நைஜீரியாவில், டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, ருமேனியாவின் லுலுயன் சிரிடா, ஆந்த்ரே இஸ்ரேட் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 11-7 என கைப்பற்றியது. இழுபறியாக இருந்த அடுத்த செட்டை இந்திய ஜோடி 12-10 என வசப்படுத்தியது. பின் நடந்த மூன்றாவது செட்டை இந்திய ஜோடி 11-4 என எளிதாக வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி 0-3 என்ற (7-11, 5-11, 3-11) செட் கணக்கில், ஜப்பானின் ஹிடோமி, சகி ஷிபடா ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் யாஷஸ்வினி, தியா ஜோடி, 2-3 என்ற (11-7, 11-7, 6-11, 6-11, 9-11) செட் கணக்கில் ஜப்பானின் ரெய்னோ, தென் கொரியாவின் ஜூ ஜோடியிடம் வீழ்ந்தது.
