தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/திவ்யான்ஷி இரண்டாவது இடம்

திவ்யான்ஷி இரண்டாவது இடம்

திவ்யான்ஷி இரண்டாவது இடம்


ADDED : ஜன 21, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: யூத் டேபிள் டென்னிசில் இரண்டாவது இடம் பிடித்தார் திவ்யான்ஷி.

கத்தார் தலைநகர் தோஹாவில் யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் உ இங் ஸ்யுவானை எதிர்கொண்டார். முதல் செட்டை திவ்யான்ஷி 11-6 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்டை 5-11, 4-11 என இழந்தார்.

மீண்டும் சுதாரித்த இவர், 4வது செட்டை 11-4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் ஏமாற்றிய திவ்யான்ஷி, 5-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.

15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆதித்யா, அன்கோலிகா ஜோடி, ஸ்பெயினின் அலெக்சாண்டர், ஆஸ்திரியாவின் சோபியா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 (11-4, 11-9, 11-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us