/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்...
/
இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்...
இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்...
இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்...
ADDED : பிப் 04, 2026 10:37 PM

கப்பாடோசியா: டபிள்யு.டி.டி., 'பீடர்' தொடர் முதல் சுற்றில் திவ்யான்ஷி வெற்றி பெற்றார்.
துருக்கியில் சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் 'பீடர்' தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் யூ எரினை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-4 என வென்ற திவ்யான்ஷி, அடுத்த செட்டை 11-7 என கைப்பற்றினார்.
தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 11-4 என வசப்படுத்தினார். முடிவில் திவ்யான்ஷி 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்தே படேல், ஜப்பானின் ரின் மென்தேவை சந்தித்தார். இதில் ஹர்தே, 0-3 என (3-11, 7-11, 6-11) தோல்வியடைந்தார். இந்தியாவின் சயாலி வாணி, 2-3 என (6-11, 5-11, 11-6, 11-9, 4-11) ஜப்பானின் யுய் சகுமாவிடம் வீழ்ந்தார். இந்தியாவின் சிண்ட்ரெல்லா, 0-3 என (9-11, 4-11, 9-11) ஹாங்காங்கின் செங்சுவிடம் தோல்வியடைந்தார்.