/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
காலிறுதியில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்...
/
காலிறுதியில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்...
காலிறுதியில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்...
காலிறுதியில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்...
ADDED : பிப் 12, 2026 10:18 PM

சென்னை: சென்னை டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி முன்னேறியது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் நடத்தப்படுகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி, இந்தியாவின் ஆர்ஜவ், ஜாஷ் மோடி ஜோடியை சந்தித்தது. இதில் சத்யன் ஜோடி 3-0 என்ற (11-6, 11-6, 11-4) நேர் செட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் பயாஸ், அன்குர் ஜோடி 3-0 என (11-7, 11-7, 11-7), இந்தியாவின் ஆகாஷ், ஸ்நேகித் ஜோடியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷி, சிண்ட்ரெல்லா ஜோடி 0-3 என (8-11, 2-11, 11-13) ஜப்பானின் சகுரா, சச்சி ஜோடியிடம் தோற்றது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி 3-0 என (11-4, 11-4, 11-3), இந்தியாவின் யாஷினி, செலினா ஜோடியை வீழ்த்தியது. கலப்பு இரட்டையரில் மனுஷ் ஷா, தியா உட்பட 6 இந்திய ஜோடி காலிறுதிக்குள் நுழைந்தன.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷி, 1-3 என (11-6, 6-11, 8-11, 5-11) தென் கொரியாவின் ஹன்னாவிடம் தோற்றார்.

