/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இளம் இந்திய அணி சாதனை * உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி
/
இளம் இந்திய அணி சாதனை * உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி
இளம் இந்திய அணி சாதனை * உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி
இளம் இந்திய அணி சாதனை * உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி
ADDED : நவ 25, 2025 11:11 PM

கிளஜ் நபோகா: உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு, முதன் முறையாக முன்னேறி இளம் இந்திய அணி சாதனை படைத்தது.
ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில் உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 19 வயது ஆண்கள் அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான சீன தைபேவை எதிர்கொண்டது.
முதல் போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 3-2 என (11-9, 11-8, 9-11, 8-11, 12-10) ஹிசெய்னை வீழ்த்தினார்.
அடுத்த போட்டியில் அபிநந்த் 1-3 என (12-10, 10-12, 8-11, 12-14), குவானிடம் தோல்வியடைந்தார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் பிரியானுஜ், 3-2 என (11-8, 12-10, 8-11, 7-11, 11-8) சின் டிங்கை வீழ்த்த, இந்தியா 2-1 என முந்தியது.
அடுத்து மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 0-3 என (10-12, 10-12, 10-12) வீழ்ந்தார். கடைசி, 5வது போட்டியில் இந்தியாவின் அபிநந்த், 3-0 என (11-4, 11-8, 11-8) என ஹிசெய்னை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
பெண்கள் 'வெண்கலம்'
பெண்களுக்கான 15 வயது பிரிவு அரையிறுதியில் அங்கோலிகா, தின்யான்ஷி, அனன்யா இடம் பெற்ற இந்திய அணி, தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றது.

