/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
போராடி வீழ்ந்தார் திவ்யான்ஷி * யூத் டேபிள் டென்னிசில்...
/
போராடி வீழ்ந்தார் திவ்யான்ஷி * யூத் டேபிள் டென்னிசில்...
போராடி வீழ்ந்தார் திவ்யான்ஷி * யூத் டேபிள் டென்னிசில்...
போராடி வீழ்ந்தார் திவ்யான்ஷி * யூத் டேபிள் டென்னிசில்...
ADDED : ஜன 02, 2026 10:51 PM

வதோதரா: டேபிள் டென்னிஸ் யூத் கன்டெண்டர் தொடரின் மூன்றாவது சுற்றில் திவ்யான்ஷி தோல்வியடைந்தார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், யூத் கன்டென்டர் சீரிஸ் தொடர் நேற்று வதோதராவில் (குஜராத்) துவங்கியது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டிகள் நடந்தன. 'குரூப் 1' ல் 2 வெற்றியுடன் முதலிடம் பெற்ற இந்தியாவின் திவ்யான்ஷி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். இதில் சக சக வீராங்கனை அஹோனா ராயை 11-6, 11-5, 11-4 என வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் சக வீராங்கனை ஹன்சினியிடம் 2-3 என்ற (11-5, 9-11, 11-9, 7-11, 4-11) கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
'குரூப் 18'ல் முதலிடம் பெற்ற இந்தியாவின் இனியா இளஞ்செழியன் (தமிழகம்), இரண்டாவது சுற்றில் சக வீராங்னை தனிஷ்காவை எதிர்கொண்டார். இதில் போராடிய இனியா, 1-11, 10-12, 12-14 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் ஆன்வி, நைஷா, ஆரோஹி, சான்வி, காவ்யா, ஜப்பானின் மட்சுஷிமா உள்ளிட்டோர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

